Trailer

பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏ.டி பட ட்ரைலர் வெளியானது !

Published

on

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகம் இரண்டுமே மிகப்பெரிய படமாகவும் வசூலையும் குவித்தது. அதனை தொடர்ந்து பிரபாஸ் டாப் ஹீரோ வரிசையில் இணைந்தார். இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் படங்கள் தொடர் தோல்வியை கொடுத்தது.

இந்த நிலையில் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் கல்கி 2898 ஏ.டி என்ற படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். அறிவியல் சார்ந்த திரைக்கதை கொண்ட இப்படத்தில் வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பான் இந்திய படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பைரவா என்ற கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் அறிமுக விழா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற காமிக்கான் விழாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version