News
பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டாரா பிரபு தேவா?

பிரபுதேவா நடன இயக்குநர் என்பதை தாண்டி நடிகர், இயக்குநர் என பல திறமைகள் கொண்டவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றி இயக்குநராக வலம் வந்தவர். அதன் பின் நயன்தாராவுடன் காதல் அதன் பின்னர் அவர் வாழ்க்கை கொஞ்சம் திசை மாறி போனது.
அவை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்து வரும் பிரபுதேவா அண்மையில் ஒரு பெண்ணுடன் திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவருடன் இருக்கும் அந்த பெண்ணைத்தான் பிரபுதேவா திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பெண் ஒரு மருத்துவர் என்றும் பரிசோதனைக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.