Connect with us
 

News

13 வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் பிரபு தேவா !

Published

on

விஜய்யின் போக்கிரி மற்றும் வில்லு படங்களை இயக்கியவர் பிரவுதேவா. இதில் போக்கிரி படத்தில் பிரபுதேவா விஜய்யுடன் நடனம் ஆடிய காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர்.

இதற்கு பின்னர்தான் நடன இயக்குநரும் நடிகரும் பாடல் காட்சிகளில் ஆடுவது பிரபலமானது தமிழ் சினிமாவில். தற்போது வம்சி இயக்கதில் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடித்து வரும் Thalapathy 66-வது படத்தின் படப்பிடிப்பு ஜதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடன இயக்குநராக பிரபுதேவா பணியாற்றி வருகிறார். இப்படதிலும் ஒரு பாடலுக்கு ஒரு சில நொடிகள் மட்டும் பிரபு தேவா விஜய்யுடன் நடனமாடவுள்ளாராம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி பார்த்தார்ல் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடல் காட்சியில் பிரபுதேவா நடனம் ஆடவுள்ளார் இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.