News

அம்மா – மகன் பாசத்தை சொல்லும் பிரபுதேவானின் தேள் !

Published

on

பிரபு தேவா நடிப்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஏ.ஹரிகுமார் இயக்கிருக்கும் திரைப்படம் தேள். அம்மா மகன் பாசத்தை மையமாக கொண்டுள்ள இப்படத்தில் ஈஸ்வரிராவ் பிரபுதேவா இருவரும் அம்மா மகனாக நடித்துள்ளனர். அம்மா மகன் பாசத்தை சொல்லும் ஒரு படமாக இது உருவாகியுள்ளது.

பிரபுதேவா சினிமா வாழ்க்கையில் நடனம் ஆடாமல் நடிக்கும் திரைப்படம் இது படத்தில் ஒரு நடன காட்சி கூட இல்லையாம் முழுக்க முழுக்க நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரின் நடிப்பு என்ற இன்னோரு பக்கத்தை இந்த படத்தில் காணலாம் என்கிறார் இயக்குநர் ஹரிகுமார்.

பிரபுதேவா இந்த படத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாப்பாதிரமாகவே மாறி வாழ்ந்திருக்கிறார். இப்படத்தில் இடது கை பழக்கம் உள்ளவராக வருகிறார். இப்படத்தில் பிரபுதேவா அவர்களுக்கு பேசும் வசனங்கள் மிகவும் குறைவு. முழுக்க முழுக்க முகபாவனைகளில் மூலம் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கதாப்பாத்திரம்.

இந்த திரைப்படம் பிரபுதேவா சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்கிறார் தேள் படத்தின் இயக்குநர் ஹரிகுமார். இப்படம் டிசம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending

Exit mobile version