News

12 வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் நடிக்கும் பிரகாஷ்ராஜ் !

Published

on

பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தை நடிக்கிறார் தளபதி விஜய். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.

கடந்த சில வருடங்களாக ஆக்‌ஷன் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் தளபதி விஜய். இந்த முறை காதல் கதையம்சம் கொண்ட குடும்ப திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் 66-வது படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் கில்லி, போக்கிரி, வில்லு போன்ற படங்களில் நடித்திருந்தார் இந்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர்கள் கடைசியாக 2009-ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் நடித்திருந்தனர். அதன் பின்னர் சுமார் 12 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனத். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷசத்தில் உள்ளனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகராம உள்ளது. இப்படம் அடுத்த வருடம் பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது.

Trending

Exit mobile version