News

20 வருடங்களுக்கு பின்னர் இணையும் பிரசன்னா – கனிகா !

Published

on

கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘5 ஸ்டார்’. இப்படத்தில் பிரசன்னா, கனிகா இருவரும் அறிமுகமான திரைப்படம் இது.

அதன் பின்னர் இருவரும் பல படங்களில் நடித்திருந்தாலும் அப்படத்திற்கு பின்னர் வேறு எந்த ஒரு படத்திலும் இணைந்து நடித்ததில்லை.

தற்போது இயக்குநர் பாலாஜிமோகனின் இதவி இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் என்பவர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் பிரசன்ன மற்றும் கனிகா இருவரும் 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிரபல ஓடிடி தளம் ஒன்று தயாரிக்கும் ஒரு புதிய வெப் தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version