Connect with us
 

News

வாங்கி வெளியிட்ட அன்புச்செழியனுக்கு 10 கோடி ரூபாய் நஷ்டத்தை கொடுத்த பிரின்ஸ். !

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வந்த திரைப்படம் பிரின்ஸ். படம் வெளியான நாள் முதல் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனத்தைமட்டுமே பெற்று வந்தது.

ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 7 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி நாளான்று இந்த படம் அதிக வசூல் வசூலிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் வசூல் செய்யவில்லையாம்.

இப்படத்தை வாங்கி வெளியிட்ட அன்புச்செழியனுக்கு சுமாராக 10 கோடி வரைக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சரி இங்குதான் இந்த நிலை என்றால் தெலுங்கு பக்கத்தில் வசூல் சுத்தமாக படுத்து விட்டதாம். வெளியாகி நான்கு நாட்களுக்கு வெறும் 4 கோடி வசூல் மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.