News

டீஸர் – டிரைலர் இல்லாமல் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் கோல்ட் !

Published

on

இயக்குநர் அல்போன்சு புத்ரன் இயக்கத்தில் பிரித்விராஜ் – நயன்தாரா நடிப்பில் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கோல்ட்.

முன்னதாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அல்போன்சு படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளர். நேரம், பிரேமம் என்ற மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் 7 வருட இடைவெளிக்கு பின்னர் இயக்கும் படம் என்பதாலும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்காக படக்குழு எந்த ஒரு ப்ரமோஷனும் செய்யவில்லையாம். அதாவது படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என்று எதுவுமே வெளியிடாமல் இப்படத்தை நேரடியாக டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

பிரித்விராஜ் தயாரித்து நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது.

Trending

Exit mobile version