News

யானை படத்தின் டப்பிங் பணிகளை முடித்த பிரியா பவானி சங்கர் !

Published

on

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யானை. இவர்களுடன் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராதிகா சரத்குமார் மற்றும் அருண் விஜய் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் இப்படத்தின் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

டப்பிங் ஸ்டுடியோவிலிருந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடையை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து என்னுடைய டப்பிங் பணிகளை முடித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version