News
விடாமுயற்சி படத்தில் இணையும் பிரியா பவானி சங்கர் !

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி.
இப்படத்தின் படப்பிடிப்பு துபாயிலுள்ள அஜர்பைஜான் என்னும் இடத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, ரெஜினா, என இருவரும் நடித்து வரும் நிலையில் தற்போது மூன்றாவது நாயகியாக ப்ரியா பவனி சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது அஜித் படத்திலும் இணைந்துள்ளார் இதனை அவரின் ரசிகரகள் கொண்டாடியும் வாழ்த்து கூறியும் வருகிறார்கள்.