News
ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் இயக்குநர் அகமத் இயக்கும் ஜன கன மன படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர பூலோகம் பட இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மிக விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் படமாக இருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாம்.