News
வயது, நிறத்தை வைத்து என்னை விமர்சிப்பதா ப்ரியாமணி வருத்தம் !

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பிரபலன நாயகியாக அறியப்பட்டவர் நடிகை ப்ரியாமணி. இப்படத்திற்காக தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். தற்போது திருமணம் ஆன பின்பும் நல்ல கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வெப் தொடர் தி பேமிலி மேன் 2 அண்மையில் இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமா துறை போட்டி நிறைந்து. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் கடினமாக உழைத்து மெதுவாக முன்னேறினேன். நேர்மையாக உழைத்தால் என்றாவது வெற்றி நமக்கு கிடைக்கும், திருமணம் எனக்கு நடிக்க தடையாகயில்லை. கணவர் உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க முடிகிறது. திருமணமான காஜல் அகர்வால், சமந்தா, போன்றோர் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சீனியர் நடிகையான நயன்தாராவும் நல்ல கதைகளில் நடிக்கிறார். திருமணமானவர் ஆகாதவர் என்ற வித்தியாசம் சினிமாவில் இல்லை. திறமையிருந்தால் ஜெயிக்கலாம்.
எனக்கு வயதாகிவிட்டது குண்டாக இருக்கிறேன், கறுப்பாக இருக்கிறேன் என்றும் என்னை விமர்சிக்கின்றனர். அப்படி பேசுவது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள். கருப்பும் அழகுதான் இன்று ப்ரியாமணி கூறினார்.