News

அஜித் பட விவகாரத்தில் போனி கபூர் வெற்றி !

Published

on

அஜித் சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 1999-ம் ஆண்டு வெளியான வாலி. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் வாலி படத்தை 22 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர், ஆனால் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தார் எஸ் ஜே சூர்யா. அந்த வழக்கில் ரீமேக் சம்மந்தப்பட்ட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் வசமே உள்ளதாகவும், அதனால் அவரிடம் இருந்து முறைப்படி உரிமை பெற்றுள்ள போனி கபூர் ரீமேக் செய்ய எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version