News

மோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் !

Published

on

மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கலிண்டே சிம்ஹம் மலையாள படம் ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ளது. அர்ஜூன் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டிலேயே முடிந்து கொரோனா பரவலால் முடங்கியது. இதுபோல் திரைக்கு வர தயாராகவிருந்த பகத் பாசிலின் மாலிக், நிவின் பாலி நடித்துள்ளா துறைமுகம், துல்கர் சல்மானின் குரூப், பிருதிவிராஜின் குருதி, ஆடும் ஜீவிதம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராகவுள்ளன.

இந்த நிலையில் மோகன்லாலின் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தை ஆகஸ்ட் 12-ந் தேதி கேரளா முழுவதும் 600 திரையரங்குகளில் 3 வாரங்கள் தொடர்ச்சியாக திரையிடுவது என்றும் அந்த 3 வாரமும் வேறு எந்த படங்களையும் திரையிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் தியேட்டர் அதிபர்கள் வினியோகஸ்தர்கள் சங்கங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன. ரசிகர்கள் தியேட்டர்களுக்கு இழுக்க ஒரு பெரிய படம் தேவை என்ற இந்த முடிவை எடுத்துள்ளன. இது ஒரு தலைப்பட்சமான முடிவு என்று மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version