Reviews

பி.டி.சார் – விமர்சனம் !

Published

on

Cast: Hiphop Tamizha, Kashmira Pardesh, Anikha Surendran
Production: Vels Film International Ltd
Director: Karthik Venugopalan
Screenplay: Karthik Venugopalan
Cinematography: Madhesh Manickam
Editing: Prasanna GK
Music: Hiphop Tamizha
Language: Tamil
Runtime: 2H 10 Mins
Release Date: 24 May 2024

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பி.டி.சார்.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பி.டி.ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆதி. இவரின் எதிர் வீட்டில் வசிக்கும் இளவரசு இவரின் மகள் அனிகா சுரேந்திரன். யாரும் எதிர்பாராத விதமாக அனிகா தற்கொலை செய்து கொள்கிறார். அது தற்கொலை அல்ல கொலை என வழக்கு தொடுக்கிறார் ஆதி. அதற்கு காரணம் அவர் பள்ளியின் சேர்மன் தியாகராஜன் தான் காரணம் என்கிறார். நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது. பெரிய பின்பலம் உள்ளதால் பொய் சாட்சிகளுடன் தப்பிக்க முயல்கிறார் தியாகராஜன். கொலை என்றதுக்கு சரியான சாட்சிகளை சமர்ப்பிக்க முடியாமல் திண்டாடுகிறார் ஆதி. இதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பி.டி.சார் என படத்தின் பெயரை பார்த்து விட்டு பலரும் பள்ளியில் நடக்கும் விளையாட்டுக்களை சுற்றி நடக்கும் கதை என்று நினைக்க கூடும். ஆனால் படம் அப்படி அல்ல பள்ளியில் படிக்கும் மாணவிக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் அது தொடர்பாக நடக்கும் கதை.

ஆதி வழக்கம் போல தன் துடிதுடிப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். எந்த பிரச்சனைக்கும் போக கூடாது என படத்தில் யோசியர் சொல்லி இருப்பதால் ஆதியை அவர் வீட்டில் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறார்கள். கண் முன்னால் என்ன நடந்தாலும் வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கும் பிள்ளையாக இருந்து வருகிறார். ஆனால் தன் எதிர்வீட்டு பெண் அனிகாவிற்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது என்றதும் யார் பிச்சையும் கேட்காமல் அதிரடியில் குதிக்கிறார். அனிகாவிற்கு நீதி வாங்கி கொடுக்க வேண்டும் என்று தன் வருங்கால மாமனாரான பிரவுவுடன் இணைந்து போராடுகிறார்.

நடிகை காஷ்மிரா பர்தேசி ஆதியின் காதலியாகவும் ஆதி படிக்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகவும் இருக்கிறார். ஆதியின் நீதி போராட்டத்துக்கு துணையாக ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் வந்து போய்விடுகிறார்.

ஆதியின் எதிர் வீட்டு பெண்ணாகவும் படத்தின் கருவாகவும் நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன். சமூக வலைத்தள கமெண்ட் பதிவுகளால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி நாடமாகிறது என்பது போல அவரின் கதாப்பாத்திரம். அண்மையில் இதுபோன்ற ஒரு செயல் மூலம் இளம் தாயின் தற்கொலைக்கு காரணமானது. இன்றும் சோசியல் மீடியாவில் எல்லை மீறி கமெண்ட் செய்துதான் வருகிறார்கள்.

பள்ளி சேர்மனாகவும் அமைதியான வில்லனாகவும் வரும் தியாகராஜன் கன்னம் துடிக்க துடிக்க கோபமாக பேசும் காட்சிகளில் அப்லாஸ் அள்ளுகிறார். ஆதியின் அப்பாவாக வரும் ராஜா அம்மாவாக வரும் தேவதர்ஷினி காஷ்மீரா அப்பாவாக வரும் பிரவு. அனிகா அப்பாவாக வரும் இளவரசு அழுத்தமான ஒரு கதாப்பாத்திரம் அதை நம் மனதில் ஆழமாக பதியும்படியான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். நீதிபதியாக வரும் பாக்யராஜ் தன் வழக்கமான பாணியில் நடித்திருக்கிறார்.

ஒரு முழு கமர்ஷியல் படமாக இல்லாமல் இடைவேளைக்கு பின்னர் கோர்ட் டிராமா படமாக படமாக்கியுள்ளனர். இதை இப்போதுள்ள ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Rating: 3/5

 

 

Trending

Exit mobile version