News
இந்த வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்ற புஷ்பா !

‘புஷ்பா’ படத்திற்கு , சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ‘புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல், மொழி பேதமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. இந்த பாடலுக்கு நடனமாட மட்டும் நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக திரையுலகில் வாயைப் பிளந்தார்கள்.
இந்நிலையில், தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள்2022-இல் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு வாழ்த்துகள். படக்குழுவின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் பலனளித்துள்ளன’ என்று தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா குழுவினர், அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு, திரையரங்குகளில் சமூக இடைவெளி என அத்தனை சங்கடங்களையும் தாண்டி, கடந்த 2021 டிசம்பரில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே பெரும் வசூலை அள்ளியது. அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா, சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.