News
கத்தாரிலும் பீஸ்ட் படத்தை வெளியிட தடை விதித்தது !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தீவிரவாதிகள் வணிக வளாகத்துக்குள் புகுந்து மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுப்பதும் அவர்களுடன் மோதி மக்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதும் படத்தின் மையக்கதை.
பீஸ்ட் படத்தை வெளி நாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிடுவதற்கு அனுமதி மறுத்துவிட்டது. பீஸ்ட் படத்தில் தீவிரவாதிகள் குறித்த சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும் இதனாலேயே குவைத் தணிக்கை குழு தடை விதித்தராகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த எப்.ஜ.ஆர் மலையாளத்தில் வந்த குரூப் ஆகிய படங்களுக்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்துள்ளனர். தீவிரவாதிகள் பற்றிய சர்ச்சை காட்சிகளுக்காவே கத்தார் அரசும் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.