இதை காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் இவர்களை திட்டி இந்த புகாரை ஏற்க மறுக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். தொலைந்த இவர்களின் காளையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இந்த தகவலை செய்தியாளரான நடிகை வாணி போஜன் அறிந்து அதை ஒரு செய்தியாக்கி உலகத்திற்கு வெளிகொண்டுவருகிறார்.
அதற்குப் பின்னர் காணாமல் போன வெள்ளையனும் – கருப்பனும் கிடைத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர் மித்துன் மாணிக்கம் கிராமத்து ஏழை விவசாதியாக குன்னி முத்து என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஆசை ஆசையாக தான் வளர்த்த காளைகள் காணாமல் போனதும் இவர் துடிக்கும் துடிப்பு படம் முழுவதுமே ஒரு கவலையான கதாப்பாத்திரமாக படம் முழுவதும் வருகிறார்.அதே சமயம் ஒரு சில காட்சிகளில் இவர் கோபப்படும் இடங்களிலும் சரி மனைவி ரம்யாவிற்கு பக்க பலமாக ஆறுதல் சொல்லும் இடத்திலும் சரி பாஸ் மார்க் வாங்குகிறார்.
குன்னி முத்துவின் மனைவியாக வீராயி என்ற கதாப்பாத்திரத்தில் வரும் ரம்யா பாண்டியன். கண்டிப்பாக ரசிகர்கள் பார்த்ததும் ஆச்சர்ய படுத்தும். நம்ம ரம்யா பாண்டியனா அப்படி என்று நம்மை கேட்க வைக்கும். இது போல் இவருக்கு நடிப்பது ஒன்றும் புதியு அல்ல இவர் நடித்த ஜோக்கர் என்ற படத்திலும் இது போன்ற ஒரு வேடத்தில் வந்து மிரட்டியுள்ளார் நம்மை. இது போன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக ரம்யாவை பாராட்டியே ஆகவேண்டும்.
செய்தி சேனல் நிரூபராக வரும் நடிகை வாணி போஜன். படத்தில் பெரிய அளவில் இவருக்கு காட்சிகள் இல்லை என்றாலும். வழக்கமான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார். பெரிதாக இவருக்கு புதிய காட்சிகள் என்று படத்தில் இல்லை. அனைத்தும் சினிமாவில் வரும் சாதாரண காட்சிகள்தான்.
படத்தில் நடித்து மற்ற கதாப்பாதிரங்கள் நாயகனின் நண்பன் மண்தின்னியாக நடித்திருக்கும் வடிவேல் முருகன் இன்றைய அரசியல் நிலவரங்களை பற்றி சொல்லி காமெடிக்கு முயற்சி செய்கிறார். அப்பத்தாவாக நடித்திருக்கும் லட்சுமி கிராமத்து வேடத்தில் அசத்தல்.
– Cinetimee
பின்னணி பாடகர் கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இன்னும் பாடல்களில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம். அதே போல பின்னணி இசையில் காட்சிகளுக்கு உணவுகளை கொடுத்துள்ளார். பூச்சேரி கிராமத்தின் வறட்சியை அளவு மீறாமல் அழகாக உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
நல்லது செய்வதாக கூறி ஊழழ் செய்துள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டும் ஒரு திரைப்படம்.