Connect with us
 

Reviews

Radhe Shyam – Movie Review Tamil !

Published

on

பி ரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’

Movie Details

1970-களின் நடக்கும் கதை வெளி நாட்டில் புகழ் பெற்ற மிகப்பெரிய கைரேகை நிபுணர் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் வாழ்ந்து வருகிறார் பிரபாஸ். தன் வாழ்க்கையை முன்பே கணித்து அதன் படி வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் பிரபாஸ் அதே நகரில் வசிக்கும் டாக்டர் பூஜா ஹேக்டேவை சந்தித்து காதலில் விழுகிறார்.

ஒரு கட்டத்தில் தன் கை ரேகையை பிரபாஸிடம் காட்டி தன் எதிர்காலத்தை சொல்ல சொல்கிறார். 75 ஆண்டு வரைக்கும் உனக்கு சிறப்பான வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறார். அந்த நொடியே மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து மயங்கி விழுகிறார். அப்போதான் பூஜா ஹேக்டேவுக்கு மருந்தே கண்டு பிடிக்க முடியாத வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வாழ்நாள் அறுபதே நாட்கள்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதை முற்றிலுமாக மறுத்து நான் சொன்னது போல நடக்கும் என்கிறார் பிரபாஸ் இறுதியில் பிரபாஸ் கூறியது போல நடந்ததா இல்லையா இருவரும் காதலில் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் பிரபாஸ் பாகுபலி, சாஹோ என அதிரடி ஆக்‌ஷன் பான் – இந்தியா படங்களில் பார்த்த நமக்கு இந்த படத்தில் முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் ஹீரோவாக மட்டுமே பார்க்க முடிகிறது. கைரேகை நிபுணராக காதல் நடிப்பிலும் கை தேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் பிரபாஸ் ரசிகர்களுக்காக ஒரு ஆக்‌ஷன் காட்சியை வைத்துள்ளனர். அதுவும் நம்மால் நம்மவே முடியாத காட்சியாக இருக்கிறது ஆனாலும் பிரம்மாண்டமான ஒரு ஆக்‌ஷன் காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள்.

விக்ரம் ஆதித்யாவாக பிரபாஸ் மற்றும் பிரேரனாவாக பூஜா ஹெக்டே என இருவரும் முழுக்க முழுக்க காதல் படத்துக்கு தேவையான பங்களிப்பை சரியாக செய்துள்ளார்கள்.
Cinetimee

படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே பிரெர்னா என்ற கதாபாத்திரத்தில் தன் அழகாலும் வசீகரிக்க வைக்கிறார். குறிப்பாக இவரின் அழகிற்கு ஏற்ற உடையும் அதை காட்டும் தொழி நுட்பமும் இவரின் அழகை மேலும் அழகாக காட்டியுள்ளனர்.

பிரபாஸ் அம்மாவாக வரும் பாக்யஶ்ரீ, சில காட்சிகளுக்கு மட்டுமே வந்து செல்கிறார். பூஜா ஹெக்டே பெரியப்பாவாக வரும் சச்சின் கெட்கர், பிரபாஸின் குருவாக சத்யராஜ் இருவருக்கும் சொல்லும்படியான அழுத்தமான கதாப்பாத்திரங்கள். கப்பல் கேப்டனாக வரும் ஜெயராம் நகைச்சுவைக்கு என வந்து நம்மை நச்சரிக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசை ரசிக்க வைக்கிறது அதுவும் யுவனின் குரலில் வரும் யாரோ யார் அவளே பாடலும் சித் ஶ்ரீராம் குரலில் வரும் திரையோடு தூரிகை நம்மை வெகுவாக ரசிக்க வைக்கிறது. அதே போல தமனின் பின்னணி இசை காதல் படத்திற்கு கை கோர்த்து நடக்கிறது.

படத்தின் குறை என்றால் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை என்னவென்று தெரிந்த பின்னர் வரும் காட்சிகள் அனைத்துமே நமக்கு எந்த ஒரு விதத்திலும் சுவாரசியத்தை கொடுக்கவில்லை. இருவரும் இறுதியில் இணைவார்களா இல்லையா என்ற ஒரு பதற்றம் படம் பார்க்கும் நமக்கு துளி கூட வரவே இல்லை. காதலே வேண்டாம் என இருக்கும் பிரபாஸ் எதற்காக பூஜா ஹெக்டே மேல் காதல் கொண்டார் அதற்காக காரணமும் சொல்லவே இல்லை இப்படி பல கேள்விகளுக்கு நமக்கு விடை கிடைக்காமலே படத்தை முடித்து விடுகிறார்கள்.


மொத்தத்தில் ராதே ஷ்யாம் காதல் மற்றும் ரொமான்ஸ் மட்டுமே !