Connect with us
 

News

அரண்மனை 4 பிரம்மாண்ட வெற்றியால் காஞ்சனா 4 படத்தை தூசு தட்டும் ராகவா லாரன்ஸ் !

Published

on

நடிகர் ராகவா லாரன்ஸ் பல படங்களை இயக்கி நடித்திருந்தாலும் அதில் மாபெரும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் முனி. இப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரிலும் பின்னர் காஞ்சனா 2 என வெளியான அனைத்து பாகங்களும் வெறித்தனமான வெற்றி.

இதனை தொடர்ந்து காஞ்சனா 3 படத்தை மிக பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கவுள்ளார்.இன்னனும் ஆரம்பிக்காமல் அதனை கிடப்பில் போட்டு வைத்துள்ளார் ராலன்ஸ்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதனால் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தையும் லாரன்ஸ் இயக்கி அவரே நடிக்கவுள்ளார்.