News
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் வைரம் கொள்ளை !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இயக்குநரான இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், மற்றும் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைந்த்திருந்த 60 சவரன் தங்க மற்றும் வைர நகைகள் நவத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் இது குறித்த தகவல் தற்போதுதான் வெளிவந்துள்ளதாக தெரிகிறது. போலீஸ் தொடர்ந்து இந்த திருட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.