News
ஜெயிலர் வெற்றி பெற மண் சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்கள் !

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படம் வெற்றி பெற வேண்டும் என மதுரை திருப்பரங்குன்றத்தில் மண் சோறு சாப்பிட்டு அங்கபிரதட்சனம் வழிபட்டனர் ரஜினி ரசிகர்கள்.

#image_title
மதுரை மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரஜினியை கொண்டாடி தீர்த்து விடுவார்கள். மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜெயிலர் படம் வெளியாவதால் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் இது போன்று செய்து வருகிறார்கள்.

#image_title
அதோடு ஜெயிலர் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மதுரையிலுள்ள முக்கியமான கோயில்களின் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்கள்.

#image_title
இன்று மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள வெயில் காலத்து அம்மன் கோயிலில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சரவணன் தலைமையில் உள்ள ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்திக்கடன் செலுத்தினர்.

#image_title