News
பொன்னியின் செல்வன் இசை விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி – கமல் !

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள திரைப்படம் Ponniyin Selvan. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் என பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளனர்.
மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இம்மாதம் 30-ம் தேதி வெளியாகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது ஆனால் தற்போது கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.