News
மீண்டும் தாத்தா ஆகின்றாரா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்த நிலையில் இவர் கர்ப்பமாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மிக விரைவில் மிக விரைவில் இவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த இனிப்பான செய்தி ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பின்னர்தான் தெரியும் என்றும் இதனையடுத்துதான் இந்த செய்தி தீயாக பரவியது என்று கூறப்படுகிறது.
ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதை அடுத்து அவரது குடும்பத்தினர் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது