News
வருமான வரித்துறை சார்பில் நடிகர் ரஜினிகாந்திற்கு விருது !

வருமான வரி தினத்தை ஒட்டி தமிழ் நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விருது.
ஜூலை 24-ம் தேதி வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை புதுவை கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் வழங்கினார் இந்த விருதுக்கு ரஜினி வரமுடியாத காரணத்தால் Rajinikanth பதிலாக அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.