News

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது !

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முதல் முறையாக ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணி உருவாகி உள்ளதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 2.0, பேட்ட, அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் நல்ல லாபத்தைக் கொடுத்த நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Trending

Exit mobile version