News
டான் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரஜினிகாந்த் !

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் டான்.இன்றைய இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை சமீபத்தில் திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவினரை போனில் அழைத்து பாராட்டி வாழ்த்தியுள்ளார். மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து அழுது விட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.