Connect with us
 

News

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் டிரைலர் தேதி அறிவிப்பு !

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். அக்டோபர் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் மனசிலாயோ பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சுமார் 2 மணிநேரம் 47 நிமிடம் இப்படம் ஓடும். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 3-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.