Connect with us
 

Reviews

வேட்டையன் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், கிஷோர், துஷாரா விஜயன்
Production: லைகா புரொடக்ஷன்ஸ்
Director:த.செ. ஞானவேல்
Screenplay:பா. கிருத்திகா
Cinematography: K கதிர்
Editing: பிலோமின் ராஜ்
Music: அனிருத் ரவிச்சந்தர்
Language: Tamil
Runtime: 2H 43Mins
Release Date: 10 October 2024

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி இருக்கும் ரஜினிகாந்த்.இந்திய அளவில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டவர். எஸ்.பி.ஆக இருக்கும் ரஜினிகாந்த் துஷாரா ஆசிரியராக பணி புரியும் பள்ளியில் கஞ்சா கடத்தல் செய்தவனை ரஜினியிடம் புகார் செய்ய அவனை என்கவுன்டர் செய்கிறார். அதன் பின்னர் சென்னைக்கு பணி மாற்றம் காரணமாக செல்கிறார். அங்கு முகாம் தெரியாத ஒருவனால் கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதனை விசாரிக்க நியமிக்கப்படுகிறார் கிஷோர். ஆனால் குற்றவாளியை கண்டு பிடிக்க தடுமாறுகிறார். அப்படி கண்டுபிடித்த குற்றவாளி தப்பித்தும் செல்கிறான். பின்னர் இந்த விசாரணை ரஜினிகாந்திடம் செல்கிறது. இரண்டே நாளில் அந்த குற்றவாளியை என்கவுன்டர் செய்கிறார்.

ஆனால் உண்மையான குற்றவாளி இறந்த அந்த இளைஞன் அல்ல என மனித உரிமை நீதிபதி அமிதாப்பச்சன் ரஜினியிடம் தெரிவிக்கிறார். தான் தவறு செய்து விட்டேன் என குற்ற உணர்வில் இருக்கும் ரஜினி உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டு பிடிக்க முயற்கிறார் ரஜினிகாந்த். அதை கண்டு பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இப்படியான போலீஸ் காதாப்பாத்திரங்கள் ஒன்றும் ரஜினிகாந்துக்கு புதிது அல்ல. என்கவுன்டர் செய்வதை சரி என நியாப்படுத்தி பேசும் கதாப்பாத்திரம். ஆனால் அதில் தன்னால் ஒரு அப்பாவி உயிர் பலி போய்விடுகிறதே என்று நினைத்து அதை சரி செய்யவும் அதற்கான தண்டனையும் ஏற்றுக்கொள்ளும் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார்.

ரஜினிக்கு சரி சமமாக திரையில் வருபவர் நடிகர் பஹத் பாசில். திருடனாக இருந்து ரஜினி இவருக்கு புத்தி சொல்லி திருத்தி ரஜினிக்கு உதவும் ஒரு டெக்கி கதாப்பாத்திரம். ஒரு சிறு நகைச்சுவை கலந்த சிரிக்க வைக்கும் கதாப்பாத்திரம்.

மனித உரிமை கமிஷனின் நீதிபதியாக வரும் அமிதாப்பச்சன். நன்றாக நடித்தாலும் தமிழை சரி வரை உச்சரிக்க முடியாமல் பாவம் திண்டாடுகிறார். இருந்தாலும் ஒரு சிறப்பான அழுத்தமான கதாப்பாத்திரம்.

அரசு ஏழை பள்ளி மாணவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் ஆசிரியையாக துஷாரா விஜயன். இவரும் இவரின் மர்மமான மரணம்தான் படத்தின் மையக்கதை. திரையில் கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

ரஜினிகாந்த் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் மனசிலாயோ பாடல் காட்சிகளிலும் ஒரு சண்டைக்காட்சிலும் வந்து மாஸ் காட்டி விட்டு செல்கிறார்.

ரஜினியின் விசாரணை போலீஸ் அதிகாரியாக வரும் ரித்திகா சிங் ஒரு துடிப்பான தைரியமான கதாப்பாத்திரம். படம் முழுவதும் வருகிறார் சிறப்பான நடிப்பு.

படத்தின் வில்லன் யார் என்பதுதான் மிகப்பெரிய சன்பென்ஸ் இடைவேளை வரை நீடிக்கிறது. கல்வி என்ற ஒன்றை வைத்து ஏழை பெற்றோர்களை ஏமாற்றி பொய்யான ஒரு வாக்கை கொடுத்து அதிலிருந்து கோடி கோடியாக சம்மதிக்கும் கார்ப்பரேட் வில்லனாக ராணா டகுபதி.

ராக்ஸ்டார் அனிருத் பாடல்கள் ஆட வைக்கிறது இருந்தாலும் பின்னணி இசை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பது வருத்தம். ஒளிப்பதிவாளர் கதிர் கன்னியாகுமாரி, சென்னை என அனைத்து இடங்களையும் கண்களுக்கு குளிர்ச்சியாக கொடுத்துள்ளார்.

பஹத் பாசில் எல்லா இடங்களிலும் எல்லா இடத்திலும் செல்வதும் அங்கு அவரை யாரும் கண்டு பிடிக்காதது எப்படி என்பது சினிமாத்தன்மையாகவே உள்ளது. இடைவேளைக்கு பின்னர் வில்லன் யார் கொலைகாரன் யார் என்ற விசாரணை விறுவிறுப்பு இல்லாமல் தொய்வாக போகிறது.

 

Rating [3.5/5]