News
21 நாட்களிலே ஓடிடி தளத்தில் வெளியான ரஜினியின் அண்ணாத்த !
![](https://cinetimee.com/wp-content/uploads/2021/11/News-36.jpg)
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி பண்டியை திருநாளில் வெளியானது. ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியது.
படம் வெளியாகி 21 நாட்களே ஆன நிலையில் இன்று அண்ணாத்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிதுள்ள இப்படம் இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
தற்போது இதற்கு புதிதாக ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது படம் வெளியாகி 30 நாட்கள் ஆனபின்னரே ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட வேண்டும் ஆனால் அண்ணாத்த 21 நாட்களே ஆன நிலையில் ஓடிடியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதனால் மற்ற தயாரிப்பாளர்களும் இனி இஷ்டம் போல தங்கள் படங்களை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்துகொள்ளும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.