News

தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் பிரபல நடிகர் பேத்தி !

Published

on

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜ்குமார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார். ராஜ்குமாருக்கு சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் என்ற மகன்களும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ராஜ்குமார் பேத்தி தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.இவரின் மகள் பேத்தியான தன்யா ராம்குமார் கன்னட திரையுலகில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார்.

தன்யா ராம்குமார் நடிக்கும் தமிழ் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்துக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version