News
இயக்குனர் ராஜூ முருகன் அண்ணன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் !

குக்கூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ராஜூ முருகன். இதன் பின்னர் ஜோக்கர் மற்றும் ஜிப்சி போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இவரின் அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். இவர் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்ப்பட்ட இவருக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.