News
வாரிசு படத்தை பார்த்து படக்குழுவையும் விஜய்யையும் பாராட்டிய ராம் சரண் !

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு.
பொங்களுக்கு வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை விஜயை தவிர படக்குழுவினர் அனைவரும் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்த தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு விஜய்யின் அனுமதியுடன் தில் ராஜூ இப்படத்தை போட்டு காட்டியுள்ளார்.
இப்படத்தை பார்த்த ராம்சரண் நடிகர் விஜய்யையும் படக்குழுவையும் வெகுவாக பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.