Connect with us
 

News

தன் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய வாரிசு நடிகை !

Published

on

நடிகை Rashmika Mandanna கார்த்திக்குடன் சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் Rashmika Mandanna தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் Rashmika Mandanna – வுக்குமிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த வாரம் வெளியான சீதா ராமம் திரைப்படம் Rashmika Mandanna நடிப்பில் மிகவும் ரசிக்கப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது இந்தியில் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இதுவரையில் ரூ.1 கோடி சம்பளம் பெற்றார். தற்போது புஷ்பா 2-ம் பாகம் படத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தொகையை தயாரிப்பு நிறுவனும் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாம்.