News

விக்ரமுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தன்னா !

Published

on

Vikram நடிக்கும் 61-வது படத்தில் ஜோடியாகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Vikram நடிக்கும் 61-வது திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இத்திரைப்படம் 19-ம் நூற்றாண்டில் நடித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம். இப்படத்திற்கான பூஜை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தன்னா தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version