Connect with us
 

News

அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் ரத்தசாட்சி !

Published

on

ஆஹா (AHA) OTT தளத்தை சூறையாடியது மகிழ் மன்றத்தின் தயாரிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் வெளிவந்த ரத்தசாட்சி.

ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் அண்மையில் வெளியான ரத்த சாட்சி ரசிகர்களுடைய மிக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பலா என்று திரைப்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம். திரைப்பட பிரபலங்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் என்று அனைவரும் பாராட்டிய இத்த திரைப்படம் வெளியாகும் முன்பு நக்சிலேட்டை தாக்கும் என்ற அளவிற்கு புரட்சிகள் வெடித்த திரைப்படம் வெளியான பின்பு ஒரு மனிதனின் வாழ்க்கையை தத்ரூபமாக உணர்ச்சிகளிலும் வசனங்களிலும் காட்சி அமைக்கப்பட்டது தெரிந்து மக்களால் அதிகம் பகிர்வு செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெயரை இத் திரைப்படம் பெற்றுள்ளது.

ஜெய் பீம், சூரரைப் போற்று, செல்லோ ஷோ உள்ளிட்ட பல துணிச்சலான அற்புதமான படங்களை OTT ஸ்பேஸ் உருவாக்கியுள்ளது.
அதேபோல் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், திரையரங்குகளில் வெளியானால் பல கோடிகளை வசூலித்திருக்கும் என பிரபல திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்த சாட்சியுடன் வெற்றி மாறன் தயாரிப்பில் லா ராஜ்குமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கிஷோர், கலையரசன், ஆண்டனி, ஷீலா, வேலா ராமமூர்த்தி, நடித்துள்ள பேட்டை காளி Web Series- யும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.படக் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.