Connect with us
 

Reviews

ரத்தம் – விமர்சனம் !

Published

on

Cast: Vijay Antony, Mahima Nambiar, Ramya Nambeesan,
Production: Kamal Bohra, G.Dhananjayan, Pradeep B, and Pankaj Bohra of Infiniti Film Ventures
Director: C.S. Amudhan
Screenplay: Athisha, Karkibava, Thozhar Aathi
Cinematography: Gopi Amarnath
Editing: T.S. Suresh 
Music: Kannan Narayanan
Language: Tamil
Runtime: 2 Hrs 23 Mins
Release Date: 6 October 2023

இயக்குநர் ஷி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் திரைப்படம் விமர்சனம்.

இதுவரையில் நம் தமிழ் சினிமாவில் ரவுடிகள் மற்றும் கூலி படைகள் கொலை செய்து பார்த்துள்ளோம் முதல் முறையாக பெண் ஒருவர் இப்போதுள்ள டெக்னாலஜியை வைத்து கொலைகள் செய்து பார்த்ததில்லை அப்படிப்பட்ட ஒரு தரமான திரைப்படம் இது.

மிகப்பெரிய பத்திரிக்கை புலனாய்வு பத்திரிக்கையாளர் விஜய் ஆண்டனி. உலக அளவில் புகழ் பெற்ற அவரின் மனைவியின் மரணத்துக்கு நான்தான் காரணம் என குற்றவுணர்ச்சியில் குடிகாரனாக கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார்.

இதே சமயம் சென்னை உள்ள வானம் என்ற பத்திரிக்கை அலுவலகத்தில் நிழல்கள் ரவியின் மகன் அலுவலகத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். தான் இன்னொரு மகனாக நினைக்கும் விஜய் ஆண்டனியை நிழல்கள் ரவி நேரில் சென்று சந்தித்து அந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்க மீண்டும் சென்னை வந்து நிழல்கள் ரவி பத்திரிக்கையில் வேலையில் சேர்கிறார். அந்த கொலைக்கான காரணத்தை தேடும் மேலும் பல கொலைகள் கண்ணில் படுகிறது அவை என்ன இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை எப்படி கண்டு பிடித்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கொலை படத்திற்கு பின்னர் மீண்டும் வாழ்க்கை தொலைத்தாய் ஆண் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மனைவியை இழந்த கணவனாகவும் மகளை வளர்க்கும் பொறுப்பான தகப்பனாவும் சகோதரனை இழந்து வாடும் ஒரு ஆணாகவும் விஜய் ஆண்டனியை இங்கு எப்படி பார்த்தாலும் சோக கடல் போல திரையில் தெரிகிறார்.

வானம் என்ற பத்திரிக்கை க்ரைம் எடிட்டராக வரும் நந்திதா ஸ்வேதா இவரையும் அந்த பத்திரிக்கையும் சுற்றி கதை நகர்தாலும் அந்த கதாப்பாத்திற்றதுக்கு தேவையான அழுத்தமான நடிப்பை மிக மிக சரியாக கொடுத்துள்ளார்.

மகிமா நம்பியார் படத்தின் ஆரம்பத்தில் பாவம்மப்பட்ட ஒரு அம்மாவாக நாம் நினைக்க இடைவேளையில் அதில் வரும் மிகப்பெரிய சஸ்பென்ஸ் நம்மை வியக்க வைக்கிறது. குறிப்பாக அவரின் நடிப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ரம்யா நம்பீசன் சிறிய காட்சிகளில் வந்தாலும் ரசிக்கும்படியான நடிப்பு.

இடைவேளை வரை கொஞ்சம் கொஞ்சம் வேகம் கூட்டும் காட்சிகள் இடைவேளையில் நம் பல்ஸ் அதிகரிக்கும் காட்சி என கொடுத்து. இரண்டாம் பாதியில் யார் குற்றவாளி என்பதை ஒரு திடுக் சம்பவத்துடன் நமக்கு காட்டியுள்ளார். ஜாதி ஜாதி என நம் நாட்டில் சுற்றி திரியும் பைத்தியங்களை வைத்து எண்படி தற்கால தொழிநுட்பத்தை வைத்து கோடி கோடியாக பணம் சம்பாதித்துள்ளனர் இன்னும் சம்பாதிக்கின்றனர் என்பதை குழம்பம் இல்லாமல் அனைவருக்கும் புரியும் முறையில் ஒரு க்ரைம் த்ரில்லராக கொடுத்துள்ளார் அமுதன்.

Rating 3.5/5