News

அகிலன் படத்தின் தமிழக உரிமத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் !

Published

on

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் Agilan. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியானது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் Agilan படத்தின் தமிழக உரிமத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த வாரம் டைரி திரைப்படத்தை இந்த வாரம் விக்ரமின் கோப்ரா படத்தையும் வெளியிட்டுள்ளது. தற்போது ஜெயம் ரவியின் Agilan படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version