News

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சந்தா கட்டணத்தை குறைப்பு !

Published

on

வகடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது சேவையை ஆரம்பித்தது பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம். ஆரம்பித்த நாளிலிருந்து மாத சந்தா என்பது மிகவும் அதிகமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் கட்டணத்தைக் குறைத்துள்ளது நெட்பிளிக்ஸ் அதாவது, ரூ.199 ல் இருந்து,ரூ.149 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பேசிக் பிளான்ரூ.499 ல் இருந்து, 199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் பிளான ரூ.649 ல் இருந்து ரூ.499 ஆக குறைந்துள்ளது. பிரீமியம் பிளான் ரூ.799 ல் இருந்து ரூ.649 ஆக குறைந்துள்ளது.

குறிப்பாக அடுத்த வருடத்திலிருந்து வருடத்திற்கு ரூ.1000 செலுத்திய அமேசான் பிரைம் வீடியோ தனது சந்தாவை ரூ.499 அதிகரித்து இனி வருடத்திற்கு ரூ.1499 அதிகரித்த நிலையில் நெட்பிளிக்ஸ் குறைத்து வாடிக்கையாளர்களை தன் வசம் அதிகமாக கொண்டுவந்துள்ளது.இது நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி மாறி வரும் நிலையில், மற்ற ஓடிடி தளங்களுக்கும் இது போட்டியை உருவாக்கியுள்ளது.

Trending

Exit mobile version