News

எனது படங்களில் முக்கிய படமாக இருக்கும் ரெஜினா – சுனைனா !

Published

on

மலையாள பிரபலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ரெஜினா. இதில் கதையின் கதாநாயகியாக Sunaina ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதக்கிற காட்சி படத்தை பார்க்க தூண்டும். டைரக்டர் டாமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார்.

கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. டைரக்டருடைய முந்திய ஹிட் படங்களான “பைபிள் சுவத்திலே பிராணயம்”, “ஸ்டார்” போன்ற படங்களை விட “ரெஜினா” படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் “ரெஜினா” முக்கியமான படமாக இருக்கும். இவ்வாறு சுனைனா கூறினார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ஸ்டைலிஷ் திரில்லர் படமாக ‘ரெஜினா’ உருவாகிறாள்.

Trending

Exit mobile version