News
அஜித்தின் வலிமை பர்ஸ்ட் லுக்குடன் வெளியீட்டு தேதியும் வெளியீடு?

அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு மேல் காத்து கிடந்து வெறுத்து கடும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் அப்டேட்டுகள் என சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் ஐதாராபாத்தில் நடக்கவுள்ளது.
இந்த படப்பிடிப்பில் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இம்மாதமே வெளியாகவுள்ளதாம். மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.