News
மீண்டும் இணைந்த ப்ரியா ராமன் – ரஞ்சித் !
![](https://cinetimee.com/wp-content/uploads/2021/06/Priya-Raman.jpg)
கடந்த 1999-ம் ஆண்டு வெளியான நேசம் புதுசு படத்தில் நடிகர் ரஞ்சித் நடிகை ப்ரியா ராமன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். இப்படத்தின் மூலம் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து ரஞ்சித் நடிகை ராகசுதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
இந்நிலையில் நடிகர் ரஞ்சித் பிரியாராமன் ஆகியோரின் 22-வது ஆண்டு திருமண நாளில் நடிகர் ரஞ்சித் மற்றும் பிரியாராமன் இருவரும் மீண்டும் இணைந்து ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை பிரியா ராமன் நடிகர் ரஞ்சித் இருவரும் தனித்தனியாக சின்னத்திரை தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார்கள்.