News
மீண்டும் இணையும் சுந்தர் சி வடிவேலு கூட்டணி !

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பையும் ரூ 100 கோடி வசூலையும் வசூலித்து குவித்தது என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.
ஆனால் இப்படத்தை சிறிது காலம் கழித்து இப்படத்தை இயக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் சுந்தர் சி. இதற்கு இடையில் ஒரு சிறிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் சுந்தர் சி.
இந்த நிலையில் சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு – சுந்தர் சி கூட்டணியில் வெளியான வின்னர், லண்டன், ரெண்டு, கிரி, தலைநகரம் படங்களின் காமெடியை நாம் இன்றும் கொண்டாடி வருகிறோம். இப்படங்கள் அனைத்தும் வெற்றி அடைய இருந்தது வடிவேலுவின் காமெடி என்பது குறிப்பிடத்தக்கது.