News
தனுஷ், சிம்புவுடன் பட ஹீரோயின்க்கு ஆண் குழந்தை பிறந்தது !
சிம்பு நடித்த ஒஸ்தி மற்றும் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படங்களில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய்.
பின்னர் தமிழில் பெரியளவில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை இருந்தாலும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் திடீரென டாட்ட சொல்லிவிட்டு அவரின் சொந்த இடமான அமெரிக்காவிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் அங்கு எம்.பி.ஏ படிப்பை முடித்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அவருடன் படித்த ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சமூக வலைத்தளங்களில் அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி இவர் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இவரின் பெயர் லூகா ஷான்கெல்லா என்று பெயர் வைத்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் பிள்ளை லூகா ஷான் லாங்கெல்லா மே மாதம் 27ம் தேதி பிறந்தார். அப்பாவும், அம்மாவும் நலம். லூகா ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறான். பார்க்க அவன் தந்தையை போன்றே இருக்கிறான். ஆனால் அம்மாவின் மூக்கும், முடியும் இருக்கிறது. லூகா, நீ எங்கள் வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறாய்.
ஜோ லாங்கெல்லா இல்லாமல் எனக்கு அமைதியான அனுபவம் இருந்திருக்காது. அவர் தான் சிறந்த தந்தை. எனக்கு பிரசவ காலத்தில் நம்பிக்கை அளித்து, ஊக்குவித்தார். என் பிரசவத்தின் போது அம்மா இங்கு வந்தது நல்லது. என் குடும்பத்தார் எங்கள் மகனை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.