News

இன் கார் நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவ கதையா?

Published

on

அஞ்சு குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில் இயக்குநர் ஹர்ஷ்வர்தன் இயக்கத்தில் நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் இன் கார்.

காரில் கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். இப்படம் குறித்து இயக்குநர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது செல்லியில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்த கதை.

கடந்த 2018-ம் ஆண்டு படமாக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முடிந்தது. இன் கார் படம் என் வாழ்வில் என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்திரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சினைகளத் தரும் இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே இன் கார் என்கிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கேரளாவில் கடந்தப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாவனா சம்பவமே இதன் திரைக்கதையாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version