Reviews

சொர்க்கவாசல் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: RJ Balaji, Selvaraghavan, Natty, Karunaas, Saniya Iyappan, Sharaf-U-Dheen, Hakkim Shah, Balaji Sakthivel, Anthonythasan, Ravi Raghavendra, Samuel Robinson
Production: Swipe Right Studios
Director: Sidharth Vishwanath
Cinematography: Prince Anderson
Editing: Selva RK
Music: Christo Xavier
Language: Tamil
Runtime: 2H 17Min
Release Date: 29 Nov 2024

 

சென்னையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கடந்த 1999-ம் வருடம் பெரும் கலவரம் ஓர்னு நடைபெற்றது. அதில் துளை ஜெயிலர் எரித்து கொலையும் செய்யப்பட்டார். அந்த கலவரத்தை அடக்க வந்த காவல்துறையினர் சுட்டதில் சுமார் 9 கைதிகள் கொல்லப்பட்டனர். இதை மையமாக வைத்து கற்பனை கலந்து உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்த சொர்க்கவாசல். ஆர்.ஜே.பாலாஜி நடிக்க சித்தார்த் விஸ்வநாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை மத்திய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறை கண்காணிப்பாளர், சிலைக் காவலர்கள், சிறைக் கைதிகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் தலைவர் நட்டி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அங்கு என்னதான் நடந்தது என்பதை சொல்கிறார்கள் துணை சிறை கண்காணிப்பாளர் கருணாஸ், கொலைக் கைதியான ஆர்.ஜே.பாலாஜி, அவரது காதலி சானியா ஐயப்பன் இதுதான் படத்தின் கதையும் கூட.

ரோட்டுக்கடை உணவகம் நடத்திவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். எதிர்பாராத சூழலில் அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட, அந்த கொலைப்பழி பார்த்திபன் மீது விழுகிறது. இனி குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என சிறைச்சாலைக்குள்ளேயே திருந்தும் முயற்சியில் இருக்கிறார் சிகா . தான் ஏங்கும் பதவி வேறொரு வெளி நபருக்கு கிடைத்துவிட்டதால் கடுப்பில் இருக்கிறார் சிறைத்துறை அதிகாரியாக இருக்கும் கட்டபொம்மன். படத்தின் பிரதான முகங்கள் இவர்கள் தான். சிறைச்சாலைக்குள் நிகழும் ஒரு மரணம், கலவரச் சூழலாக மாற வன்முறை வெடிக்கிறது. அந்த நரகத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் என்ன என்ன நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதே சொர்க்கவாசல் படத்தின் மீதிக்கதை.

இருளும், கருணையற்ற முகங்களும், அதில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தென்படும் அன்பு நிரம்பிய உள்ளங்களையும் உள்ளடக்கிய சிறை வாழ்க்கையை செல்லுலாய்டில் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த். 1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவிய கதையாக கூறப்படுகிறது. மும்மதங்களையும் சேர்ந்தவர்கள், திருநங்கை, இலங்கைத் தமிழர், வெளிநாட்டவர் என அனைத்து தரப்பினரும் குழுமியிருக்கும் சிறையின் சுவரில் புத்தருக்கும், அம்பேத்கருக்கும், பைபிளுக்கும் இடமுண்டு.

பார்த்திபனாக RJ பாலாஜி. ரன் பேபி ரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு இறுக்கமான வேடம். இயலாமையால் நொடிந்து போகும் காட்சிகளில் ஓரளவுக்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார்.ஆனால், மற்ற காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சதுரங்கத்தில் தேவைக்கேற்ப உருவம் மாறும் கட்டபொம்மனாக கருணாஸ். இந்த சீசனில் சிறந்த குணச்சித்திர நடிகராக உருவாகிவருகிறார். சிறப்பான தேர்வு. பல கொலைகள் புரிந்த சிகாவாக செல்வராகவன். செல்வராகவின் முன்கதை கார்ட்டூனில் சொல்லப்படுகிறது.

விசாரணை அதிகரியாக வரும் நட்டிக்கு நெஞ்சு எரிச்சலுடன் பேசும் கதாபாத்திரம். அது எதற்கான குறியீடு என்பதை கடைசி வரை புரிந்துகொள்ள முடியவில்லை. 

சிறைச்சாலையை களமாகக் கொண்டு தமிழில் மிகச்சொற்பமான படங்களே வந்திருக்கிறது. சிறைச்சாலை செட்டப், அங்கிருக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்னைகள் என வித்தியச ஒன்லைன் பிடித்ததில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.அதிகார வர்க்கத்தின் சிஸ்டத்தில் உண்மை, நேர்மைக்கு எல்லாம் எந்த மதிப்பும் இல்லை என்பதை சொன்ன விதத்தில் கவனிக்க வைக்கிறார்.

1999ல் தமிழ்நாட்டின் சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரம் குறித்த படமாக விரிகிறது சொர்க்கவாசல். காவல்துறை அதிகாரிகள், ரவுடிகள், குற்றவாளிகள் என பலரும் கொல்லப்பட்ட அந்த கலவரத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரியாக வரும் நட்டி பலரின் வாக்குமூலங்களை பெறுகிறார். அந்த வாக்குமூலங்களின் வழி உண்மையும் பொய்யும் கலந்த கதை நமக்குச் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ரேஷோமோன், விருமாண்டி பாணியிலான திரைக்கதை தான் என்றாலும், அந்த படங்கள் கடத்தும் உணர்வை சொர்க்கவாசல் தர மறுக்கிறது.

Rating -3/5

 

Trending

Exit mobile version