News

ரூ.1000 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் !

Published

on

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.

வெளியான நாள் முதல் இப்படத்திற்கு உலகமெங்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாள் மட்டுமே ரூ.100 கோடியை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. மூன்று நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்து உலக அளவில் சாதனை படைத்தது.

இந்த நிலையில் ரூ.1000 கோடி வசூலை தற்போது எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனையை படக்குழு மும்பையில் விமர்ச்சியாக கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் இயக்குநர் ராஜமவிலி, ராம்சரண் ஜூனிய என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாகுபலி படத்திற்கு பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக ரூ.1000 கோடி வசூல் பட்டியலில் இணைந்துள்ளார் ராஜமவுலி.

Trending

Exit mobile version