தெலுங்கு மண்ணில் இந்திய சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோர் ஒரே காலகட்டத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை திறனோடு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். அவர்களின் போராட்ட வாழ்க்கை வரலாற்றை எடுக்காமல் அவர்களின் பெயரை மட்டும் வைத்து ஒரு கமர்ஷியல் படமாக சினிமாவாக எடுத்துள்ளார் இயக்குநர் ராஜமவுலி.
படத்தின் கதை 1920-களில் நடப்பது போன்ற கதைக்களம் ஆந்திரா காடுப்பகுதியில் ஒரு பழங்குடி சிறுமியை அடிமையாக கடத்தி டில்லி செல்கிறார் டில்லி கவர்னரின் மனைவி. தங்கள் இன சிறுமியை கொண்டுவர ஜூனியர் என்.டி.ஆர். தலைமையில் ஒரு குழு டில்லி செல்கிறது. அதே டில்லியில் ஆங்கிலேயர் ஆட்சியியாளர்களிடம் போலீஸ் வேலையில் இருப்பவர் ராம்சரண்.
அடிமையாக கடத்தி வந்த சிறுமியை மீட்க சிலர் டில்லி வந்துள்ள தகவல் டில்லி கவர்னருக்கு தெரிய வருகிறது. என்.டி.ஆரை பிடிப்பவர்களுக்கு சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்படும் என டில்லி கவர்னர் அறிவிக்கிறார். ஒரு கட்டத்தில் என்.டி.ஆரை டில்லி கவர்னரிடம் பிடித்துக்கொடுத்து தான் விரும்பிய அந்த பதவியையும் வாங்குகிறார் ராம்சரண். பின்னர் என்.டி.ஆர் செய்த குற்றதுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் ராம்சரண் என்.டி.ஆரை அந்த தூக்கு தண்ட்னையிலிருந்து தப்பிக்க வைக்கிறாரெதர்க்கு ராம்சரண் தப்பிக்க வைதார் என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜூனியர் என்.டி.ஆர். – ராம்சரண் இருவருமே அவர்களின் வேடங்களை போட்டி போட்டு நடித்துள்ளனர். அந்த கதாப்பாத்திரத்துக்கு இருவருமே மிக சரியான தேர்வு. இருவரில் யாருகு அதிக பெயர் கிடைக்கும் யார் முதலிடம் பிடிப்பார் என்ற நம்மால் கூற முடியாத அளவிற்கு இருவரின் நடிப்பு நம்மை வியக்க வைக்கிறது.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரை சுற்றி மட்டுமே நகர்வதால் மற்ற கதாப்பாத்திரங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. ராம்சரண் காதலியாக சிறப்பு தோற்றத்தில் வரும் ஆலியா பட் மொத்தமாகவே 10 நிமிடங்கள் மட்டுமே இவரின் திரை.
தமிழ் சினிமாவிலும் சரி இந்திய சினிமாவிலும் சரி இதுவரை இப்படி ஒரு பிரம்மாண்டம் வந்ததில்லை என்ற அளவுக்கு தெறிக்க விட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி.
Cinetimee
என்.டி.ஆர் – ஒலிவியா மோரிஸ் இடையிலான காதல் காட்சியை பார்க்கும் போது ஆர்யா – எமிஜாக்சன் நடித்த மதராசப்பட்டிணம் படத்தை நம் நிஅனிவுக்கு கொண்டு வருகிறது.
ராம்சரண் மாமாவாக வரும் சமுத்திரக்கனி சில காட்சிகளில் வந்து எட்டி பார்த்து விட்டு செல்கிறார். ராம்சரண் அப்பா – அம்மாவாக பிளாச்பேக்கில் வரும் அஜய் தேவ்கன் – ஸ்ரேயா. வெள்ளையர்களை எதிர்த்து துப்பாக்கி ஏந்தி போராடும் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் தலைவனாக அஜய் தேவ்கன் சற்று நேரம் வந்தாலும் அவரின் உணர்ச்சிகரமான நடிப்பு கண்டிப்பாக அவரை பற்றி பேசவைக்கும். டில்லி கவர்னராக வரும் ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் அருமை.
இப்படத்தில் காட்டியிருக்கும் பிரம்மாண்டம், கதைக்கள, கதைக்காக போடப்பட்ட அரங்குகள், தொழிநுட்பம் என தெலுக்கு சினிமாவை மீண்டும் ஒரு முறை உலக அளவிற்கு உயர்த்தி விட்டார்.
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் ரசிக்கும் விதம். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் செந்தில் குமார், கலை இயக்குநர் சாபு சிரில், படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத், சண்டைப் பயிற்சியாளர்கள் என அனைவருமே இயக்குநர் ராஜமவுலிக்கு உறுதுனையாக நிற்கிறார்கள்.
படத்தின் முதல் பாதி போவதே தெரியவில்லை அதற்குள் வரும் திருப்பங்கள் என பரபரப்பாக நகர்கின்றன. இடைவேளைக்கு பின் கதை அடுத்த காட்சி இதுதான் என்று யூகிக்க முடி கூடியதாக போகிறது.