Reviews

Rudhra Thandavam – Movie Review

Published

on

Cast: Richard Rishi, Dharsha Gupta, Gautham Menon
Production: GM Film Corporation, 7G Films
Director: Mohan G
Music: Jubin
Language: Tamil
Censor : ‘U/A’
Runtime: 2 Hour 14 Mins
Release Date: 01 October 2021

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நேர்மையான இன்ஸ்பெக்டராக இருக்கிறார் படத்தின் நாயகன் ரிச்சர்ட். சென்னையுள்ள துறைமுக போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார். போதை பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக அந்த வேலையில் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுகிறார். ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளைத் தடுத்து பிடிக்கிறார் ரிச்சர்ட். அடுத்த வேட்டையாக கஞ்சா கடத்தியதாக இரண்டு நபர்களை பிடிக்கிறார். அங்கு உள்ள வண்டியில் தப்பி செல்லும் அந்த இரண்டு நபர்களை விரட்டி பிடிக்கும் போது இருவருக்கும் காயம் ஏற்படுகிறது. அதில் ஒரு நபர் இறந்தும் விடுகிறான்.

பட்டியலினத்தை சேர்ந்த அந்த நபரை வேண்டுமென்ரே கொலை செய்து விட்டார் என்று ரிச்சர்ட் மீது பலி விழுகிறது. அந்த நபரின் குட்ம்பத்தினர் நடத்திய போராட்டம் காரணமாக ரிச்சர்ட் பணியிலிருந்து நீக்கம் செய்யபடுகிறார். அதனை தொடர்ந்து கைதும் செய்யப்படுகிறார். அதன் பின்னர் ஜாமினில் வெளி வரும் நாயகன் ரிச்சர்ட் அந்த குற்றத்தை நான் செய்யவில்லை என்பதை எப்படி நிரூபித்து இழந்த போலீஸ் வேலை எப்படி பெற்றார் என்பதே படத்தின் மீதிக்கதை.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் கஞ்சா விற்ற நபர்களின் வாழ்க்கை கெட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அந்த இளைஞர்களை இவர் காப்பாற்றும் விதம் எல்லாவற்றிலும் தரமான நடிப்பு. வேலை இழந்து கர்ப்பமாக இருக்கும் மனைவியை பிரிந்து சிறைக்கு இவர் செல்லும் காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார். இடைவேலை வலை அதிரடி களத்தில் கலக்கும் நாயகன் ரிச்சர்ட் இடைவேளைக்கு பின்னர் ஒரு எமோஷனல் காட்சிகளிலும் தரமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ரிச்சர்ட்டின் மனைவியாக வரும் நடிகை தர்ஷா குப்தாவிற்கு இதுவே முதல் படம் தமிழில். கணவர் மீது மிகுந்த பாசத்துடன் மாமா மாமா என்று சொல்லி அன்பை கொட்டி ஒரு அழகான கிராமத்து பெண்ணாக முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். கணவன் தன் பேச்சை கேட்க வேண்டும் இல்லையென்றால் பிரிந்து தனியாக வாழ்ந்து காட்டுவேன் என்ற ஒரு தைரியமான கிராமத்து பெண்ணாக அற்புதமான நடிப்பு.

வில்லனாக வரும் இயக்குநர் கெளதம் மேனன் சாதி, மதம், ஈழம், என்று மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றி போதை பொருளை கடத்த முடியுமே அந்த அளவுக்கு மிகவும் மோஷமான ஒரு கட்சி தலைவராக வருகிறார். இந்த மாதிரி ஒரு கதாப்பாத்திரத்தில் கெளதம் மேனனை பார்ப்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. படம் முழுவதும் ஒரு முரட்டுத்தனமான வில்லனாக தன்னை காட்டியுள்ளார்.

போதை பொருள் கடத்தல், போலியான அரசியல்வாதிகள் அவர்களின் உண்மையான முகம், இந்து மதத்தில் இருப்பவர்களை எப்படி மனதை மாற்றி மதம் மாற்றுகிறார்கள் அப்படி மதம் மாறியவர்கள் எப்படி பட்டியலினத்தை சேர்ந்தவர்களென்று கூறி என்ன என்ன பிரச்சனைகள் செய்கிறார்கள் என போலியான மனிதர்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி.

ஜோசப் கதாப்பாத்திரத்தில் வரும் தம்பி ராமையா படம் முழுவதும் ரிச்சர்ட் உடன் வருகிறார். வக்கிலாக வரும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நீதிபதியாக வரும் மாளவிகா அவினாஸ், ரேஞ்சர் ரவியாக வரும் ராம்ஸ், காக்கா முட்டை விக்னேஷ் இவரின் அம்மாவாக வரும் தீபா, போலீஸ் அதிகாரியாக கே.எஸ்.கே. கோபி என படத்தில் வரும் அனைவரும் ரசிக்கும்படியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஜூபின் இசையில் ஓரளவு ரசிக்க வைக்கிறது பின்னணி இசையும் ரசிக்கும் ரகமே. வட சென்னை பகுதியை தன் யதார்த்தமான கேமரா மூலம் அழகாக பதிவு செய்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பரூக் பாஷா.

இன்றைய காலத்தில் இந்த போதைப் பொருள் நம் நாட்டு இளைஞர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது. என்ற முக்கியமான ஒரு நல்ல கருத்தை இன்றைய காலத்திற்கு ஏற்ப உண்மையாக சொன்னதுக்காக கண்டிப்பாக இந்த படத்தை நாம் கொண்டாடியே ஆகவேண்டும்.

மொத்தத்தில் ‘ருத்ர தாண்டவம்’ பல இயக்குநர்கள் தொட நினைக்கும் பிரச்சனையை சொன்ன இயக்குநரின் தைரியத்துக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்.

Rating:- [yasr_overall_rating]

Trending

Exit mobile version