News

குடும்பத்துடன் சிதம்பரம் கோவிலில் சாய் பல்லவி தரிசனம் !

Published

on

நடிகை Sai Pallavi இன்று தனது குடும்பத்தினருடன் சிதம்பரத்தில் சாமி தரிசனம் செய்தார். ஆள் அரவம் இல்லாமல், கூட்டம் சேர்க்காமல் வந்து, சாமி தரிசனம் செய்தார். ரசிகர்களின் தொல்லைகளில் இருந்து, விடுபட்டு நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய நடிகை Sai Pallavi செய்த காரியம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் Sai Pallavi. இவர் முதன் முறையாக 2005-ம் ஆண்டு வெளியாகிய ‘கஸ்தூரி மான்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய ‘தாம் தூம்’ படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

பின்னர், மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனங்களை கவர்ந்தவர் Sai Pallavi. அதையடுத்து 2017-ம் ஆண்டு வெளியான ஃபிதா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், மாரி 2 படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்த சாய் பல்லவி, தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்த படி சென்று சாமி தரிசனம் செய்தார்.

Trending

Exit mobile version